நாட்டில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டமை, ஒடுக்குமுறை, மனித உரிமை மீறல்களுக்கு தாம் கடுமையான எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் அவசரகால சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (7) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, பெற்றோர் தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருவதை நாம் அறிவோம்.
கணிதப் பாடத்தில் சித்தியடைவோரின் அடைவு மட்டம் வெகுவாகக் குறைவடைந்து வருகின்றது. நூற்றுக்கு 50 சதவீதாக குறைவடைந்துள்ளது.
இரண்டு, மூன்று வருடங்களாக மாணவர்கள் முறையாக பாடசாலைக்கு செல்லவில்லையாயின் அந்த நூற்றில் 50 வீதமானோருக்கு என்ன நடக்கும் என்பதை சிந்திக்க வேண்டும். நூற்றுக்கு 75 சதவீதமாக இந்தத் தொகை அதிகரிக்கலாம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையை பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே முதலில் பொருளாதார பிரச்சினையை சீர்செய்ய வேண்டியது அவசியமாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.