இங்கிலாந்து அணிக்கு 659 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து அணி. இந்த நிலையில் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை இழந்து இங்கிலாந்து தடுமாறி வருகிறது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது.
இரு அணிகளுக்கும் இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நடைபெற்று வருகிறது.
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 347 ஓட்டங்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணி 143 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் கேன் வில்லியம்சனின் அதிரடி ஆட்டம் மூலம் 453 ஓட்டங்களைக் குவித்தது நியூசிலாந்து. வில்லியம்சன் 156 ஓட்டங்கள் எடுத்தார்.
முதல் இன்னிங்ஸில் பெற்ற முன்னிலையுடன் இங்கிலாந்து அணிக்கு 659 ஓட்டங்களை நியூசிலாந்து அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இன்றைய ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்கள் இழந்திருந்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற அந்த அணி இன்னும் 640 ஓட்டங்களை பெற வேண்டும் என்ற இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.