தேசிய கட்சியை வீழ்த்தி இடது சாரி அணியை பலப்படுத்தும் சூழ்ச்சியே இடம்பெறுவவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொது செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அனைத்து மாவட்டங்களிலும் பொது தேர்தலில் போட்டியிடுகின்றது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக புதிய இளம் உறுப்பினர்கள் வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சி என்ற வகையில் புதிய வேலைத்திட்டங்களுடன் முன்னோக்கி பயணிக்க நாம் தயாராகவுள்ளோம்.
நாட்டின் தேசியத்துவம் மற்றும் ஒருமைப்பாட்டிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்ட தருணத்தில் மக்களின் கோரிக்கையை மையதமாக கொண்டே எம்முடைய கட்சி உருவாக்கப்பட்டது. இத்தகைய பின்னணியில் எம்மீது பாரிய குற்றச்சாட்டுக்கள், ஊழல் குற்றச்சாட்டுக்கள் என்பன முன்வைக்கப்பட்டன. இருந்த போதிலும் அவற்றை பொய் என நிருபித்தமையை தொடர்ந்து மக்களை எம்மை நம்பி மீண்டும் பெரும்பாண்மையை அளித்தனர். ஆனால் நாம் விட்ட தவறால் மக்கள் மீண்டும் எம்மக்கான பதிலை ஆணையின் ஊடாக வழங்கியுள்ளனர். நாம் மக்கள் தீர்ப்பை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.
2015 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட சூழ்ச்சி மீண்டும் ஏற்படுமோ என்ற சந்தேக எழுந்துள்ளது. மீண்டும் எம்மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. தேசிய கட்சியை வீழ்த்தி இடது சாரி அணியை பலப்படுத்தும் சூழ்ச்சியே இடம்பெறுகின்றது. ஆகவே மக்கள் சிந்தித்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வேண்டியது அவசியமாகும். அதிலும் நாட்டின் வீழ்ச்சிக்கு காரணமான ஆலோசனையை வழங்கியது யார் ? அதன் பின்னணியில் இருந்தவர்கள் யார் என சிந்தித்து வாக்களிக்குமாறு தெரிவித்துக்ககொள்ள விரும்புகின்றோம்.