இந்த ஆண்டில் இதுவரை 497 இந்திய மீனவர்கள் கைது!

0
29

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறிய 497 இந்திய மீனவர்கள் கைதாகியுள்ளனர். குறித்த காலப்பகுதியில் இந்திய மீனவர்களின் 66 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான சுற்றிவளைப்பு செயற்பாடுகளை அதிகரித்துள்ளதாகக் கடற்படை அறிவித்துள்ளது.