எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படகுகளுக்கான உரிமை கோரும் வழக்கு யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நீதிபதி து.கஜநிதிபாலன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது 4 படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் நான்கு படகுகளுக்கான உரிமையாளர்கள் வராமையினால் அவை அரசுடைமையாக்கப்பட்டு கட்டளையிடப்பட்டுள்ளது.
விடுவிக்கப்பட்ட நான்கு படகுகளும் இலங்கை கடற்பரப்பில் வைத்து பராமரிக்கப்பட்டு அதற்கான பராமரிப்பு செலவாக 1 இலட்சத்து 29 ஆயிரத்து 500 ரூபாவும், இரண்டாவது படகுக்கு 54 ஆயிரத்து 500 ரூபாவும், மூன்றாம் மற்றும் நான்காம் படகுகளுக்கு தலா 14 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவும் செலுத்திப் பெற்றுக்கொள்ள முடியும் என மன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் வழக்குத் தொடுனர் மற்றும் எதிராளிகள் கட்டளை தொடர்பில் ஆட்சேபனை இருப்பின் மேன் முறையீட்டைச் செய்துகொள்ள முடியும் எனவும் மன்று பரிந்துரைத்தது.
மேன்முறையீட்டுக் காலம் வரை படகுகள் எடுத்துச்செல்ல முடியாது எனவும், மேன்முறையீட்டின் பின்னர் படகினை எடுத்துச்செல்ல முடியும் என்றும் ஊற்காவற்றுறை நீதிமன்ற நீதவான் து.கஜதிதிபாலன் கட்டளை பிறப்பித்துள்ளார்.


