இந்திய வெளிவிவகார அமைச்சர் – தமிழ்க் கட்சி தலைவர்கள் இடையே சந்திப்பு!

0
147

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களை சந்திக்கவுள்ளார். இரு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள ஜெய்சங்கர் இன்று முற்பகல் 11.45 மணிக்கு கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் தமிழ் கட்சிகளின் தலைவர்களை சந்தித்துப் பேசவுள்ளார். இந்திய தரப்பின் அழைப்பின் பேரில் நடை பெறும் இந்த சந்திப்பில் பங்கேற்க புளொட், ரெலோ, ஈ. பி. ஆர். எல். எவ், இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகள் அழைக்கப்பட்டுள்ளன. இந்த சந்திப்பில் ஜனாதிபதி ரணிலுடனான பேச்சு தொடர்பிலும், இனப் பிரச்னை தீர்வு பேச்சில் தமிழ் தரப்பின் நிலைப்பாடு தொடர்பிலும் அதிகம் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.