இந்தியன் 2 – வெளியானது அறிமுக வீடியோ

0
134

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இதில், கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 

லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு திரைக்கு கொண்டு வர படக் குழுவினர் திட்டமிட்டுள்ளநிலையில், இன்று இந்தியன் – 2 தமிழ் அறிமுக வீடியோவை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். அதேபோல் மலையாளத்தில் மோகன் லால், தெலுங்கில் எஸ்.எஸ்.ராஜமௌலி, கன்னடத்தில் கிச்சா சுதீப், ஹிந்தியில் அமீர் கான் ஆகியோரும் வெளியிட்டுள்ளனர். வீடியோவின் இறுதியில், இந்தியன் வந்துவிட்டார் என்கிற கமலின் வசனத்தை ரசிகர்கள்  ரசித்து வருகின்றனர்.