இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி-20 போட்டி

0
61

ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இரண்டாவது போட்டியில் பதிலடி கொடுத்த இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி-20 போட்டி ஹராரேவில் இன்று நடைபெறுகிறது. ஹராரே கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.