இந்தியா தமிழ்நாடு தனுஷ்கோடி அரிச்சல்முனையில், தமிழர் கட்சி சார்பில், இன்று, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெற்றது.
இன்று, முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி, தமிழர் கட்சி சார்பில், கட்சியின் மாநில செயலாளர் தீரன் திருமுருகன் தலைமையில், குழந்தைகள் உட்பட ஏராளமானோர், தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் உருவப் படத்தை, தெர்மாகோல் மூலம் உருவாக்கப்பட்ட படகில் வைத்து, கடலில் விட்ட பின்னர், கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்காக கோசம் எழுப்பப்பட்டதுடன், ராஜபக்சவுக்கு எதிராகவும், கோஷங்களை எழுப்பி, கண்டனத்தை பதிவுசெய்தனர்.