இந்தோனேசியாவில் நேற்று ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பாதுகாப்பு அமைச்சர் பிரபோவோ சுபியாண்டோ, முன்னாள் மாகாண கவர்னர்கள் அனீஸ் பஸ்லேடன், கஞ்சர் பிரனோவோ ஆகியோர் இடையே போட்டி நிலவியது.
வாக்குப்பதிவு முடிந்ததும் தொடங்கிய எண்ணிக்கையில் பிரபோவோ சுபியாண்டே தொடர்ந்து முன்னிலை வகித்தார்.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் பிரபோவோ 57 முதல் 59 சதவீதம் வரை வாக்குகள் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
இதற்கிடையே தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய பிரபோவோ, தனது வெற்றி அனைத்து இந்தோனேசியர்களின் வெற்றியாகும் என்றார்.