இன,மத பேதமற்ற அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புதல் தொடர்பில் செயலமர்வு

0
150

இன, மத பேதமற்ற அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கான அரசியல் தலைமைகளின் பங்களிப்பு எனும் தொனிப்பொருளில் அம்பாறை மாவட்ட அரசியல் பிரமுகர்களுக்கான ஒரு நாள் பயிற்சி செயலமர்வு அக்கரைப்பற்றில் இன்று நடைபெற்றது.

தேசிய சமாதான பேரவையின் அனுசரணையுடன் றுகுணு லங்கா மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சர்வமத குழு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த செயலமர்வில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு பிரதேச செயலகங்களுக்குட்பட்ட அரசியல் பிரமுகர்கள், சமயத்தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சர்வமத குழுவின் உறுப்பினர்கள் பங்குபற்றினர்.

றுகுணு லங்கா நிறுவனத்தின் தலைவர் எம்.எஸ்.ஜவ்பர் தலைமையில் இடம்பெற்ற பயிற்சி செயலமர்வில் தேசிய சமாதான பேரவையின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர்
எம்.யு. உவைஸ் அதானி வளவாளராக கலந்து கொண்டார்.

இன நல்லுறவுக்கான வழிமுறைகள் அதற்காக அரசியல் தலைவர்கள் முன்னெடுக்க வேண்டிய செயற்றிட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதேவேளை இரத்தினபுரி மாவட்டம் ரக்குவான பிரதேச சர்வமத குழுவினர் அம்பாறை மாவாட்டத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருத்தனர்.

தேசிய சமாதான பேரவையின் அனுசரணையுடன் அட்டாளைச்சேனை சர்வமத குழு மற்றும் ருகுனு லங்கா இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தது. மதங்களுக்கு இடையிலான ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் இடம்பெற்ற நிகழ்வில் அனுபவ பகிர்வுகள் இடம்பெற்றதுடன் கலை கலாசார பண்பாடுகள் தொடர்பில் நேரடியாக
பார்ப்பதற்கான சந்தர்ப்பங்களும் உருவாக்கப்பட்டிருந்தன.

அக்கரைப்பற்று பெரிய ஜும்மா பள்ளியில் இடம்பெற்ற குத்துபா பிரசங்கத்தை அனைவரும் கேடப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டதுடன் அட்டாளைச்சேனை அரபுக்கல்லூரியில் கலந்துரையாடலும் இடம்பெற்றது.