இன்று முதல் தனியார் பேருந்துகள் வழமை போன்று சேவையில்!

0
176

இன்று முதல் தனியார் பேருந்துகள் வழமை போன்று போக்குவரத்து சேவையில் ஈடுபடும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜயரட்ன தெரிவித்துள்ளார். தனியார் பஸ் பேருந்துகளுக்கு தற்போது எரிபொருள் போதியளவு கிடைக்கின்றது. எனவே எதிர்காலத்தில் எதுவித தடையும் இன்றி தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடும் என அவர் குறிப்பிட்டார். முறையாக எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் விரைவில் இடம்பெறவுள்ளது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகள் 50 வீதமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.