30 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இப்படியும் நடக்கிறது

டான் ரீ. வி. யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் அரசியல் நிகழ்ச்சியை ஊடகவியலாளர் ஜெயச்சந்திரன் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அவர் நிகழ்ச்சிகளில் அனைத்து அரசியல் கட்சிகளையும் விவாதத்துக்கு அழைத்திருப்பார். அப்படி அழைத்தபோதிலும் ஏதேனும் ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் அதில் கலந்துகொள்ள மறுத்தால் ஒரு கதிரையை வைத்துவிட்டு அதில் அந்த கட்சியின் பெயரை எழுதி வைத்திருப்பார். அந்த சம்பவம்தான் அன்றும் அந்த நிகழ்ச்சியை பார்த்தபோது ஞாபகத்துக்கு வந்தது. கடந்த ஆறாம் திகதி சஜித் பிரேமதாஸவுக்கும் அநுரகுமார திஸநாயக்காவுக்கும் இடையே பகிரங்க விவாதம் நடக்கவிருந்தது.

விவாதத்துக்கு முதன்முதலில் அழைப்பு விடுத்தவர்கள் ஜே. வி. பியினர்தான் என்றாலும்இ அந்த சவாலை ஏற்றுக்கொண்டு தத்தமது பொருளாதார திட்டங்கள் குறித்து பகிரங்க விவாதம் நடத்தத் தாம் தயார் என்றும் ஆனால்இ தலைவர்கள் விவாதிக்கும் அதேவேளையில் இரண்டு கட்சிகளின் பொருளியல் வல்லுநர்கள் குழுவும் விவாதிக்க வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் கோரிக்கை விடுத்தார். ஆனால் அது குறித்து பரிசீலிக்கலாம் என்று தெரிவித்திருந்த தேசிய மக்கள் சக்தி முதலில் சஜித்துடன் விவாதத்துக்கு தாங்களே திகதியையும் நிர்ணயித்து அனுப்பி யிருந்தது.

ஆனால் அந்தத் திகதி தமக்கு வசதியில்லை என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தி தமக்கு வசதியான நாள் ஒன்றை அறிவித்தது. அந்த நாள் கடந்த ஆறாம் திகதி. அதாவது இரு தலைவர்களும் நேருக்கு நேர் விவாதிக்க சஜித் அணி குறிப்பிட்ட நாள். ஆனால் தமது பொருளாதார நிபுணர்கள் குழுவுடனும் விவாதத்துக்குத் தயார் என்றால் மாத்திரமே தாம் அந்த விவாதத்தில் கலந்துகொள்வோம் என்றும் தனிப்பட்ட தலைவர்கள் மாத்திரம் கலந்துகொள்ளும் விவாதத்தில் கலந்துகொள்ள முடியாது எனவும் ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்திருந்தது.

இந்த பகிரங்க விவாதத்தை அரச தொலைக்காட்சியான ஐ. ரி. என். தொலைக்காட்சியிலேயே நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டி ருந்தது. ஆனால்இ ஆறாம் திகதி தமது நிபுணர்கள் குழுவுடனும் அவர்களின் நிபுணர்கள் குழு விவாதம் நடத்துவதென்றால் மாத்திரமே தான் அந்த விவாதத்துக்கு வருவேன் என்று சஜித் அறிவித்துவிட்டபோதிலும்இ குறிப்பிட்ட அந்தத் திகதியில் அநுரகுமார திஸநாயக்க ஐ. ரி. என். பணிமனையில் வந்து இறங்கிவிட் டார்.

சஜித் குறிப்பிட்ட அதேதினத்தில் தான் விவாதத்துக்கு வந்திருக்கிறார் என்று கூறிய அநுரகுமார அங்கே தொலைக்கட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளர்களுடன் விவாதத்தில் கலந்துகொண்டார். சஜித் வரவில்லை என்பதை சஜித்தின் பலவீனமாகக் காட்ட ஐ. ரி. என். தீவிர முயற்சி எடுத்ததை அன்றைய நிகழ்ச்சியை பார்த்தபோது புரிந்து கொள்ள முடிந்தது. ஐ. ரி. என். தொலைக்கட்சி முழுக்க முழுக்க அரச கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு நிறுவனம். இப்படி அவர் விவாதத்துக்கு வரவில்லை என்பதை அறிவித்த பின்னரும் அநுரவை வரவழைத்து விவாதத்தை நடத்திஇ சஜித்தை சங்கடத்துக்கு உள்ளாக்கியதன் பின்னணியில் யார் இருந்திருப்பார்கள் என்பது நாம் புரிந்துகொள்ளக்கூடியதே.

இப்போது நேற்றிலிருந்து சமூகவலைத்தளங்களை ஆக்கிரமித் திருப்பது சஜித் பிரேமதாஸவின் யாழ்ப்பாண வருகையின்போது நடந்த சம்பவம் ஒன்றுதான். சஜித் பிரேமதாஸவின் யாழ்ப்பாண வருகையின்போதுஇ தான் சென்றிருந்த ஒரு மைதானத்தில் நின்றவாறுஇ ‘இங்கே டெஸ்ட் போட்டிகள் நடத்தக்கூடிய மைதானம் எதுவும் இல்லையா?’ என்று கேட்கிறார். அவர் என்ன கேட்கிறார் என்பதை புரிந்துகொள்ளாத அவருக்கு பதிலளிக்கும் நபர்இ தாங்கள் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தையே பயன்படுத்துவதாகக் கூறஇ அவர் ‘இல்லை இல்லை டெஸ்ட் போட்டி நடத்தக்கூடிய மைதானம்இ லைற்றுக் கள் எல்லாம் பூட்டி…. அதாவது ஆர். பிரேமதாஸ மைதானம் போல…’ என்று கேட்கிறார்.

இத்தனைக்கும் அவருக்கு மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்தவர் அவரின் கட்சியின் யாழப்பாணத்துக்கான பிரதம அமைப்பாளர் மாத்திரமல்ல கட்சியின் பிரதி செயலாளரும்கூட. அவருக்குக்கூட யாழப்பாணத் தில் ஒரு சர்வதேச தரத்துடன் டெஸ்ட் போட்டிகளை நடத்தக் கூடிய மைதானம் இல்லை என்பது தெரிந்திருக்கவில்லை. தேசிய கட்சிகளின் பிரச்னையே இதுதான். தமது கட்சியின் யாழ்ப்பாண அமைப்பாளராக யாரை நியமிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொள்வதில்லை. தமது அமைப்பாளராக இருப்பவர் அவர் எத்தகைய விடயங்களை தெரிந்து வைத்திருக்கும் ஒருவராக இருக்கவேண்டும் என்ற சாதாரண அறிவைக்கூட அவர்கள் கொண்டிருக்கின்றனரா என்பதைக்கூட கவனிப்பதில்லை.

வைரலாகும் இந்த காணொலியை பார்த்துவிட்டுஇ தெற்கிலிருந்து ஓர் இளம் அரசியல்வாதி இந்த ஊர்க்குருவியுடன் தொடர்பு கொண்டு கேட்டார்இ ‘என்ன சஜித் பிரேமதாஸ யாழ்ப்பாணத்துக்கு வந்து அங்கும் அம்பலப்பட்டு நிற்கிறார்போல..’ என்று. அண்மையில் சில நாட்களாக தனது அரசியல் எதிரிகளைஇ அவர்களின் பலவீனங்களை வெளிச்சம் போடும் வேலையை ‘அவர்’ தொடக்கிவிட்டார் என்றும் இதே அரசியல் பிரமுகர்தான் சில நாட்களுக்கு முன்னர் ஊர்க்குருவிக்கு சொல்லியிருந்தார். அவர் சொன்ன அந்த ‘அவர்’ யார் என்பதை புரிந்துகொள்ள நமது வாசகர்களுக்கு அதிகம் சிரமம் இருக்காது என்பதால் அவர் யார் என்பதை இங்கே குறிப்பிடவில்லை. இப்போது அந்த ‘அவரின்’ வேலையை இவரும் இலகுவாக்கு கிறார் என்றே தெரிகின்றது.

ஊர்க்குருவி.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles