இம்ரான் கானின் கட்சியை தடை செய்ய பாகிஸ்தான் அரசு நடவடிக்கை

0
63

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தாரிக் இ இன்சாப் (PTI) கட்சிக்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் அதுல்லா தரார் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலே அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

“பாகிஸ்தான் தாரிக் இ இன்சாப் கட்சியை தடை செய்ய மத்திய அரசு வழக்கு தொடரும்” என்று அதுல்லா தரார் கூறினார்.