இராணுவ அதிகாரிகள் மற்றும் தரநிலைகளில் கடமையாற்றியவர்களுக்கு பதவி உயர்வு

0
120

372 இராணுவ அதிகாரிகள் மற்றும் ஏனைய தரநிலைகளில் கடமையாற்றிய ஆயிரத்து 127 இராணுவ பேருக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளனர். இராணுவத்தின் 73 ஆம் ஆண்டு நிறைவையொட்டி குறித்த அதிகாரிகள் தரமுயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்ததுள்ளது. இராணுவ தளபதி ஜெனரல் விக்கும் லியனகேயின் பரிந்துரைக்கமைய ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவினால் இந்த தரமுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இராணுவத்தின் 73ம் ஆண்டு நிறைவுக்கான விசேட நிகழ்வுகள் இராணுவ தளபதி விக்கும் லியனகே தலைமையில் பனாகொட இராணுவ முகாமில் இடம்பெறவுள்ளது.