இராணுவப் பயிற்சியின் போது ஏற்பட்ட சேதத்திற்குத் தென் கொரிய விமானப்படை கவலை!

0
32

தென் கொரியாவில் இராணுவப் பயிற்சிகளின் போது, போர் விமானங்களிலிருந்து எறியப்பட்ட குண்டுகள், பொதுமக்கள் வாழும் இடங்களில் வீழ்ந்ததில் ஒரு தேவாலயம் உட்படப் பல கட்டடங்கள் சேதமடைந்ததுடன், பதினைந்து பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த நாட்டு தீயணைப்பு சேவை விடுத்துள்ள அறிக்கையில் 15 பேர் காயமடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
இராணுவ பயிற்சிகளின் போது முகு-16 ஜெட் விமானங்களிலிருந்து 225 கிலோ கிராமுடைய 82 குண்டுகள் எல்லைக்கு வெளியே விழுந்ததாகத் தென் கொரியாவின் விமானப்படை தெரிவித்துள்ளது. அசாதாரண விபத்தால் ஏற்பட்ட சேதத்திற்கு நாங்கள் வருந்துகிறோம் என தென்கொரிய விமானப்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.