இருபதுக்கு20 அணிகளுக்கான தரப்பட்டியலை வெளியிட்டது ஐ.சி.சி!

0
149

இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு பின்னர், அணிகளுக்கான தரப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இந்திய அணி தொடர்ந்தும் 268 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

இரண்டாம் இடத்தில் 265 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி உள்ளது.

மூன்றாம் இடத்திலிருந்த தென் ஆபிரிக்க அணி ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 4ஆம் இடத்தில் உள்ள அதேவேளை, 4ஆம் இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி ஒரு இடம் முன்னேறி 258 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப்பட்டியலில், இலங்கை அணி தொடர்ந்தும் 8ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.