இலங்கைக்கான ரஷ்யா தூதுவருக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்குமிடையில் கலந்துரையாடல்

0
82

இலங்கைக்கான ரஷ்யா தூதுவருக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குமிடையில் நேற்று ஆளுநர் செயலகத்தில் சந்திப்பு இடம்பெற்றது.


இலங்கைக்கான ரஷ்யா தூதுவர் லெவன் எஸ். ட்ஜகார்யன், திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு மரியாதை நிமித்தம் வருகை தந்தார்.


கிழக்கு மாகாணத்தின் சமீபத்திய அபிவிருத்திகள் குறித்து கேட்டறிந்து கொண்ட ரஷ்யா தூதுவர், கிழக்கு மாகாணத்திற்கு வருகைதரும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்துத் தருவதாக கிழக்கு மாகாண ஆளுநருக்கு உறுதியளித்தார்.