இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் உலக வங்கி குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி முகவரகத்தினால் மேலும் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் முன்னிலையில் இலங்கை அரசாங்கத்தின் நிதி அமைச்சர் கே.எம்.மஹிந்த சிறிவர்தன மற்றும் உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டேவிட் சிஸ்லேன் ஆகியோர் இதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.
இலங்கையின் மறுசீரமைப்புஇ நிலைப்படுத்தல் மற்றும் பொருளாதாரத்தை சுமூக நிலைக்கு கொண்டு வருவதற்கான அபிவிருத்தி கொள்கைகளுக்கு நிதியளிக்கும் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் இந்த நிதி உதவி இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.