இலங்கைக்கு கடத்தவிருந்த 100 கிலோ கஞ்சா பறிமுதல்

0
83

இலங்கைக்கு கடத்துவதற்காக தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே சரக்கு வாகனத்தில் கொண்டு வந்த 100 கிலோ கஞ்சா மூட்டைகளை பொலிஸாா் பறிமுதல் செய்தனா்.

இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கடல் பகுதியில் கடலோரக் பொலிஸாரும், திருவாடானை பொலிஸ் துணைக் கண்காணிப்பாளா் நிரேஷ் தலைமையிலான தொண்டி பொலிஸாரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் 3 மூட்டைகளில் 100 கிலோ கஞ்சா கொண்டு வந்தமை தெரியவந்துள்ளது.

பொலிஸாரைக் கண்டதும் கடத்தல்காரா்கள் தப்பியோடிவிட்டனா். இதையடுத்து, தொண்டி பொலிஸாா் வழக்குப் பதிவு செய்து கஞ்சா மூட்டைகளையும், சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். மேலும், தலைமறைவான கடத்தல்காரா்களை பொலிஸாா் தேடி வருகின்றனா்.