இலங்கையின் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக ஒன்றுபட்டு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் – சர்வதேச நாணயநிதியத்தின் தலைவர்

0
119

இலங்கையின் நெருக்கடிக்கு தீர்வை  காண்பதற்காக ஒன்றுபட்டு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என சர்வதேச நாணயநிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு இந்த நெருக்கடியான தருணத்தில் சர்வதேச நாணயநிதியம்  ஆதரவளிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தலைமையிலான குழுவுடனான சந்திப்பின் பின்னர்  அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆகியோருடன் சிறந்த சந்திப்பு இடம்பெற்றது  இலங்கைக்கு ஆதரவளிப்பதற்காகவே சர்வதேச நாணயநிதியம் இங்குள்ளது என டுவிட்டர் ஒன்றில் அவர்  குறிப்பிட்டுள்ளார்

இலங்கை இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அனைவரும் ஒன்றுபட்டு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.