இலங்கையில் கடந்த 14 நாள்களில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலானது கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என அந்தச் சங்கத்தின் மருத்துவர் ஹரித அளுத்கே சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 704 பேரில் 701 பேர் மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய அந்தக் கொத்தணிகளில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 788 ஆக அதிகரித்துள்ளது.