அம்பாறை – அறுகம்பை பகுதிக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்க பிரஜைகளுக்கு, அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அம்பாறை – அறுகம்பை பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவல் எச்சரித்துள்ளதால், மறு அறிவித்தல் வரும் வரை அறுகம்பை பகுதியை தவிர்க்குமாறு, நாட்டிற்கு வருகைதந்துள்ள அமெரிக்க பிரஜைகளுக்கு, அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க தூதரகம் இன்று வெளியிட்டுள்ள அவசர அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.