நாட்டில் புகைப்பிடித்தலால், நாளொன்றுக்கு 50 முதல் 60 மரணங்கள் பதிவாவதாக, மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
அநுராதபுரத்தில் உள்ள சர்வோதய நிறுவனத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது, மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையத்தினால் இந்த தரவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
![](https://eelanadu.lk/wp-content/uploads/2024/07/Sequence-10.00_06_20_20.Still051-1024x576.jpg)
நாளொன்றுக்கு 16 இலட்சம் பேர் புகைப்பிடிப்பதுடன், அதற்காக நாளொன்றுக்கு 50 கோடி ரூபாவுக்கும் அதிகமாக செலவு செய்கின்றனர்.
புகைப்பழக்கம் காரணமாக, அதிகளவான மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக, மக்கள் மத்தியில் புகைப்பழக்கம் 9 வீதமாக குறைவடைந்துள்ளதாகவும், மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் குறிப்பிட்டுள்ளது.