இலஞ்ச ஊழல் வழக்கிலிருந்து குமார வெல்கம எம்.பி விடுதலை!

0
182

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது இலங்கை போக்குவரத்து சபையில் இல்லாத பிரதித் தலைவர் பதவியை உருவாக்கி அரசாங்கத்திற்கு சுமார் 3 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக, கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.