யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் கம்பியால் தாக்கப்பட்டு 29 வயதுடைய நிரோஜன் என்ற இளைஞன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று முன்தினம் வீதியில் சென்றுகொண்டிருந்தவேளை போதையில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த இருவர் அவருடன் முரண்பட்டுள்ளனர். பின்னர் முரண்பாடு கைகலப்பாக மாறியது. இதன்போது அவர்கள் இருவரும் சேர்ந்து குறித்த நபரின் தலை மீது கம்பியால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த நபர் அயலில் உள்ளவர்கள் மூலம் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
படுகொலை தொடர்பில் பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த 17 மற்றும் 20 வயதுகளையுடைய இருவர் கைது செய்யப்பட்டனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.