இளைஞர்களுக்கான தொழிற் பயிற்சி நிலையம் மட்டக்களப்பு ஓட்டமாவடியில் ஆரம்பம்

0
24

இளைஞர்களுக்கான தொழிற் பயிற்ச்சி நிலையம் மட்டக்களப்பு ஓட்டமாவடியில் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற இளைஞர் தொழில் பயிற்சி நிலையத்தின் தேசிய ரீதியான 56 வது நிலையமும் மாவட்டத்தின் இரண்டாவது நிலையமும் ஓட்டமாவடி பொது நூலக கட்டடத்தில் ஓட்டமாவடி ‘வொக்கேஸ்னல் ட்ரெயினிங் சென்டர்’ எனும் பெயரில் திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிழக்கு மாகான ஆளுனர் ஜயந்தலால் ரட் நாயக்கவுக்கு பதிலாக வருகை தந்திருந்த அவருடைய இணைப்பதிகாரி உமர் ஹத்தாப் அப்துல்லாஹ் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவரும் நிறைவேற்று பணிப்பாளருமான சட்டத்தரனி சிந்தக்க தர்சன ஹேவா பத்திரண ஆகியோர் கலந்து கொண்டு பயிற்ச்சி நிலையத்தினை திறந்து வைத்தனர்.

தேசிய இளைஞர்மன்றத்தின் பணிப்பாளர் சிந்தக்க ஹேவா பத்திரணவினால் பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரியாக மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் சிரேஷ்ட்ட அதிகாரி ஏ.ஹனீபா நியமிக்கப்பட்டார்.


கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் செயலாளர் தாஹிர் அக்கீல், திடீர் அணர்த்த சேவைகள் அமைப்பின் பணிப்பாளர் எம்.ஏ.சி நியாஸ்த்தீன், பிரதேச சபையின் செயலாளர் ஷிஹாப்தீன், மாகான, மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் உயர் அதிகாரிகள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.