இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 43 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு!!

0
26

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து மே மாதம் 08 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 43  துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 43  துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 29 பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 94 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.