இஸ்ரேலில் ஐவரின் உயிரைப் பறித்த நபர் சுட்டுக் கொலை

0
167

இஸ்ரேல் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள டெல் அவிவ் நகரில் நேற்று மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
இந்த தாக்குதலில் 5 பேர் பலியாகியுள்ள நிலையில் பலர் படுகாயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எம்-16 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி திடீரென மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற பொலிசார் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது