இஸ்ரேல் – ஹமாஸ் போர்: பலியானோர் எண்ணிக்கை 11,000 ஆக உயர்வு

0
148

31வது நாளாக நீடித்து வருகின்ற இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,405 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.  

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழி, தரைவழி தாக்குதலில் இதுவரை 9 ஆயிரத்து 770 பேர் உயிரிழந்துள்ளனர். 

அதேபோல், பலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரை 155 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் போராளிகள் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 330 ஆக அதிகரித்துள்ளது.