உயர்தரப் பரீட்சை நேர மின்வெட்டு தொடர்பில் முறைப்பாடுகளை சமர்ப்பிக்கவும்: ஜனக ரத்நாயக்க

0
140

உயர்தரப் பரீட்சை நடைபெறும் 2023 ஜனவரி 26 ஆம் திகதி முதல் 2023 பெப்ரவரி 17 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் மின்வெட்டுக்கான ஒப்புதல் வழங்கப்படவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அவ்வாறு ஒப்புதல் வழங்காத மின்வெட்டுக்கு பாவனையாளர்கள் முகம் கொடுத்தால், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு எழுத்துப்பூர்வமாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் முறைப்பாடுகளை 077 56 87 387 என்ற வாட்ஸ்அப் இலக்கத்திற்கோ அல்லது 011 23 92 641 என்ற தொலைநகல் இலக்கத்திற்கோ அறிவிக்க முடியும் என ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.