உயர்நீதிமன்ற நீதியரசர் நியமனம் தொடர்பிலான அரசியலமைப்பு பேரவையின் தீர்மானமொன்றைச் சவாலுக்கு உட்படுத்தித் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவினை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரான நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்னவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்குமாறு அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியலமைப்பு பேரவைக்குப் பரிந்துரைகளை முன்வைத்திருந்தார்.
குறித்த பரிந்துரையை நிராகரிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை எடுத்த தீர்மானத்தினால் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகச் சட்டத்தரணி எஸ்.எம்.பத்திரத்னவினால் உயர்நீதிமன்றில் குறித்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்தநிலையில் மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம், 20 இலட்சம் ரூபாய் கட்டணத்திற்கு உட்பட்டுக் குறித்த மனுவினை நிராகரித்து உத்தரவிட்டதாக நீதிமன்றத்துக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.