உலக நாடுகளினது பொருளாதார நிலை ஆபத்தான நிலையில் – அவுஸ்திரேலியாவும் பாதிக்கப்படும் – திறைசேரி அமைச்சர்

0
175

வரவு செலவுதிட்டத்தில் அவுஸ்திரேலியாவின் எதிர்கால பொருளாதார வளர்ச்சி  குறித்த மதிப்பீடுகளில் குறைப்புகள் இடம்பெறலாம் என திறைசேரி விவகாரங்களிற்கான அமைச்சர் ஜிம் சால்மெர்ஸ் Treasurer Jim Chalmers   தெரிவித்துள்ளார்.

சர்வதேச பொருளாதாரம் எதிர்வரும் நாட்களில் எவ்வாறானதாக காணப்படும் என்பது குறித்து வெளியாகும்  எதிர்மறையான மதிப்பீடுகள் காரணமாக அவுஸ்திரேலியாவின், குறித்த மதிப்பீடுகளும் மாறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

உலக சந்தைகள் மற்றும் அவுஸ்திரேலியாவின வர்த்தக சகாக்கள் அபாயகரமான பாதையை எதிர்கொண்டுள்ளனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2023 இல் பிரிட்டனின் பொருளாதாரம் 0.25 வீதத்தினால் வீழ்ச்சியடையும் என அவுஸ்திரேலிய வரவு செலவுதிட்டம் மதிப்பிடும் அமெரிக்கா ஒரு வீதத்தினால் வளர்ச்சியடையும் இந்த சர்வதேச நிலைமையிலிருந்து அவுஸ்திரேலியா தப்பாது என என திறைசேரி விவகாரங்களிற்கான அமைச்சர் ஜிம் சால்மெர்ஸ் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் வரவு செலவு திட்டம் உலகளாவிய வளர்ச்சி மற்றும் முக்கியமான பொருளாதாரங்களின் வளர்ச்சியில் சரிவை வெளிப்படுத்தும் சில நாடுகள் மந்த நிலையில் சிக்குப்படும் ஆபத்தில் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய திறைசேரி அமைச்சர் கடந்த வாரம் ஜி20 நிதியமைச்சர்கள் சர்வதேச நாணயநிதியம் ஆகியவற்றின் பிரதிநிதிகளை சந்திப்பதற்காக வோசிங்டன் சென்றிருந்தார்.

அந்த விஜயத்தினை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ள அமைச்சர் அவுஸ்திரேலிய வரவு செலவு திட்டம் முக்கிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த எதிர்பார்ப்புகளை குறைக்கும் என தெரிவித்துள்ளார்.

உலகப்பொருளாதாரம் ஆபத்தான நிலையில் செல்கின்றது எதிர்மறையான ஆபத்துக்கள் காணப்படுகின்றன வோசிங்டனில் எனது சகாக்களுடனான சந்திப்பில் இது தெளிவாகியது என திறைசேரி அமைச்சர் தெரிவித்துள்ளார்