எதிர்க் கட்சியில் அங்கம் வகித்தால் கட்டாயம் குற்றங்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.தற்போதைய அரசாங்கமும் கடந்த காலங்களில் இதனையே செய்து வந்ததாகக் கூறினார்.நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
எனினும் அரசாங்கம் கொண்டு வரும் திட்டங்களை அவமதிப்பதோ அல்லது அவற்றை இல்லாமல் செய்வதோ தமது நோக்கம் இல்லை என வேலுசாமி இராதாகிருஷ்ணன் கூறினார்.அரசாங்கத்தின் நற்செயற்பாடுகளுக்கு தாம் எப்போதும் ஆதரவளிக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.கையூட்டலை ஒழிப்பதில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள திட்டங்கள் வரவேற்கத்தக்கது எனவும் கடந்த அரசாங்கங்களில் கையூட்டல் என்பது பாரிய பிரச்சினையாக இருந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.