எரிபொருள் பிரச்சினையால் ஹோட்டல் துறையில் 5 இலட்சம் பேர் பாதிப்பு

0
166

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு அதேபோன்று உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக ஹோட்டல் துறையைச் சேர்ந்த 5 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடானது சகல துறைகளையும் செயிலழக்க செய்துள்ளது.

எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் தொடர்ச்சியாக நீண்டவரிசையில் நாள் கணக்கில் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் இந்த எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கடந்த சில மாதங்களாகவே சகல துறைகளும் செயலிழந்துள்ளன.

நாட்டில் எரிபொருள் பிரச்சினை ஆரம்பமான காலம் முதலே அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை அரசாங்கத்தின் கவனத்துக்கொண்டு சென்றோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.