எலிசபெத் ராணியை சந்தித்த ஜோ பைடன் தம்பதிகள்

0
208

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் சந்தித்துள்ளனர்.
பிரிட்டனில் ஜூன் 11 முதல் 13 வரை ‘ஜி 7’ நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேரடியாக கலந்து கொண்டார். ஜோ பைடன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அவரின் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
இப்பயணத்தின் போதே நேற்று முன் தினம் (13.06.20321) இங்கிலாந்தின் பெர்க் ஷயர் பகுதியில் அமைந்திருக்கும் விண்ட்சர் கோட்டையில் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் சந்தித்து உரையாடியுள்ளனர்.
குறித்த சந்திப்பின் பின் செய்தியாளர்களிடம் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் பேசிய பைடன், ராணி மிகவும் கிருபையானவர். ஞாயிற்றுக்கிழமை விண்ட்சர் கோட்டையில் இருவரும் சந்தித்த சிறிது நேரத்திலேயே இரண்டாம் எலிசபெத் மகாராணி தனது தாயை நினைவுபடுத்தியதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார்