எழுத்தாளர் பிரமிளா பிரதீபனின் விரும்பித் தொலையுமொரு காடு சிறுகதைத் தொகுதியின் விமர்சன அரங்கு, கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.
ஞானம் சஞ்சிகையின் ஒருங்கிணைப்பில் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியர் தி.ஞானசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வரவேற்புரையை குந்தவி ஸ்ரீகாந்த் நிகழ்த்தினார்.
தலைமையுரையை ஞானம் சஞ்சிகையின் ஆசிரியர் தி.ஞானசேகரன் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வுக்கு புரவலர் ஹாசிம் உமர் முன்னிலை வகித்தார்.
ஏற்புரையையும் நன்றியுரையையும் நூலாசிரியர் பிரமிளா பிரதீபன் வழங்கினார்.
கதைக்களமும் குறியீட்டுக் கதைகளும் என்ற தலைப்பில் கவிஞரும் கல்விப் பணிப்பாளருமான சு.முரளிதரன் நிகழ்த்தினார்.
சிறுகதைகளின் அக உளவியல் என்ற தலைப்பில் எழுத்தாளரும் தகவம் செயலாளருமான வசந்தி தயாபரன் உரை நிகழ்த்தினார்.
சிறுகதைகளின் மொழி அழகியல் தொடர்பில் இலக்கிய செயற்பாட்டாளர் சேவுகன் இராஜேந்திரன் உரையாற்றினார்.
இதன்போது நூலின் பிரதிகள் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலைஞர்கள், இலக்கிய செயற்பாட்டாளர்கள், ஊடகவியளலாளர்கள் என பலதரப்பினர் கலந்துகொண்டனர்.