எஸ்.எம்.எம்.முஷாரப் எம்.பியின் எண்ணக்கருவில் மருதமுனையில் மரநடுகை

0
192

‘பயன்தரு தென்னை மரங்களை நட்டு கடலரிப்பை தடுத்து மருதமுனை கடற்கரையின் அழகினைப் பேணுவோம்’ எனும் தொனிப்பொருளில் அம்பாறை
மருதமுனை கடற்கரையில் மரநடுகை செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.


அம்பாறை மாவட்டத்தில் பசுமைப்புரட்சியை ஏற்படுத்துவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப்பினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஒரு மில்லியன் மரங்களை நடும் வேலைத்திட்டத்தின் கீழ், பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அப்துல் கபூர் தலைமையில்
மரநடுகை இடம்பெற்றது.


அட்டாளைச்சேனை, இறக்காமம், திருக்கோவில், நிந்தவுர், சம்மாந்துறை, கல்முனை, பானம, அக்கறைப்பற்று, சாய்ந்தமருது, பாலமுனை, ஒலுவில், நாவிதன்வெளி,
மாவடிப்பள்ளி, வரிப்பத்தான்சேனை ஆகிய பிரதேசங்களிலும் இவ்வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.