ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் ஊழலை ஒழிக்கும் பொற்காலம் கொண்டுவரப்படும்!

0
71

இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக, ஊழலை ஒழிக்கும் பொற்காலம் ஒன்று ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்படும் என, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஹோமாகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து அவர் இதனை தெரிவித்தார்.

அமைச்சர்களின் விருப்பத்திற்கேற்ப அரசாங்க டெண்டர்கள் வழங்கப்பட மாட்டாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் இளம் சட்ட வல்லுநர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. இதில் பெருமளவிலான இளம் சட்ட வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.