ஒக்டோபர் மாதத்தில் 131 சிறுமிகள் வன்புணர்வு: பத்து பேர் கர்ப்பம்

0
122

இலங்கையில் அண்மைக்காலமாக சிறுவர் மீதான வன்புணர்வுச் சம்பவங்கள் அதிரித்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி கடந்த ஒக்டோபர் மாத்தில் மட்டும் 16 வயதுக்குட்பட்ட 131 சிறுமிகள் வன்புணர்விற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காவல்துறை சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகத்தின் பிரதி காவல்துறைமா அதிபர் ரேணுகா ஜெயசுந்தர இதனை தெரிவித்துள்ளார்.

இவர்களில் 10 பேர் தற்போது கர்ப்பமாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.அதேவேளை,கடந்த செப்டம்பர் மாதத்தில் 16 வயதுக்குட்பட்ட 168 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அவர்களில் 22 பேர் கர்ப்பம் தரித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.