ஒரு கோடி ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல்!

0
9

நுகேகொடை தெல்கொட பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிலிருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வலன மத்திய ஊழல் தடுப்புப் பிரிவுஇ அந்தப் பகுதியில் உள்ள பிரபல தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான மகிழுந்து உதிரிப் பாகங்கள் இறக்குமதி வர்த்தக நிலையத்தில் நடத்திய சோதனையின் போது இந்த மதுபானங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

மகிழுந்து உதிரிப் பாகங்களுக்கு இடையில் மதுபானம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த வர்த்தக நிலையத்தில் மேலாளராகப் பணியாற்றிய 59 வயதுடைய மஹரகமவைச் சேர்ந்த ஒருவர் இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வெளிநாட்டு மதுபானங்கள் கொள்ளுப்பிட்டி மற்றும் கொட்டாவ பகுதிகளில் உள்ள இரவு விடுதிகளுக்கு எடுத்துச் செல்ல தயாராக இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.