நியூசிலாந்தில் ஒரே இரவில் ஏழு தேவாலயங்களுக்கு தீவைப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த தாக்குதலின் போது, தலைநகர் வெலிங்டனுக்கு வடக்கே உள்ள மாஸ்டர்டன் நகரத்தில் உள்ள நான்கு தேவாலயங்கள் பாரிய சேதமடைந்துள்ளதாக நியூசிலாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில், மேலும் மூன்று தேவாலயக் கட்டிடங்கள் தாக்குதல் காரர்களால் தாக்கப்பட்டுள்ளன.எனினும் அவை தீப்பிடிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வைரராபா பகுதி முழுவதும் உள்ள மீட்பு குழுவினர் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எபிபானியின் அங்கிலிகன் தேவாலயம், மாஸ்டர்டன் புனித பாட்ரிக் கத்தோலிக்க தேவாலயம், பாப்டிஸ்ட் தேவாலயம் மற்றும் எக்விப்பர்ஸ் தேவாலயம் ஆகிய தேவாலயங்களே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.