ஒரே விபத்தில் வீதியால் பயணித்தவரும் வீட்டிலிருந்த சிறுவனும் படுகாயம்!

0
74

சம்மாந்துறை பொலிஸ் வீதியில் இன்று திங்கட்கிழமை (17) காலை 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவ் வீதியால் பயணித்த மோட்டார் சைக்கிள் துவிச்சக்கரவண்டியில் பயணித்த வயோதிபருடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் வயோதிபர் காயமடைந்து ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை வீட்டின் முன்னால் அமர்ந்து இருந்த சிறுவன் மீதும் அதே மோட்டார் சைக்கிள் மோதியது. சிறுவனும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.