க.பொ.த உயர்தரப் பரீட்சை நிலையங்களில் நுளம்பு ஒழிப்பு

0
36

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் அனைத்து நிலையங்களிலும் நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு பணித்துள்ளது.

பரீட்சை நிலையங்களுக்கு நுளம்பு விரட்டிகளை கொண்டு வருமாறு, பரீட்சார்த்திகளுக்கு சமூக ஆலோசகர் லஹிரு கொடித்துவக்கு அறிவுறுத்தியுள்ளார்.

உயர்தரப் பரீட்சைக்கு 2 ஆயிரத்து 312 பரீட்சை நிலையங்கள் தயார்ப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதுடன், இம்முறை பரீட்சைக்கு 3 இலட்சத்து 33 ஆயிரத்து 185 பரீட்சார்த்திகள் தேற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.