கொழுமபு – பாலத்துறை, கஜீமா வத்தை தீ விபத்து தொடர்பில் கொழும்பு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவொன்றை நியமித்து பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இன்று (28) நடைபெற்ற கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் இந்தக் கோரிக்கையை முன்வைத்த அவர், கடந்த ஒன்றரை வருடத்தில் இந்த குடிசை வீடுகளில் மூன்று தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்த வீடுகளில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் சட்டவிரோத குடியிருப்பாளர்கள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.