கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இ.போ.ச சாரதி பொலிஸ் நிலையத்துக்கு தப்பி வந்தார்

0
100

கம்பளை இலங்கை போக்குவரத்துச்  சபை  பஸ் டிப்போவில் கடமையாற்றும் பஸ் சாரதி, நேற்று காலை சிலரால் தாக்கப்பட்டுக்  கடத்தப்பட்ட நிலையில், கடத்தப்பட்டவர்களிடம் இருந்து தப்பி கம்பளை பொலிஸ் நிலையத்துக்கு  இரவு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தம்மை வேனில் ஏற்றி கொழும்பு, ஒருகொடவத்தை பகுதிக்கு அழைத்துச் சென்றதாகவும்,  அந்த இனந்தெரியாத நபர்கள் தன்னிடம் வாள் ஒன்று தொடர்பாக பலமுறை கேட்டதாகவும் குறித்த சாரதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர், பொலிஸாரால் கம்பளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேனில் கடத்திச் சென்ற குழுவில் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

நேற்றுக்  காலை மாவெலயில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸை  வேன்  ஒன்றில் வந்த சிலர் வழிமறித்து அதன் சாரதியை கடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.