கடலில் நிகழவிருந்த அனர்த்தம் : காப்பாற்றப்பட்ட வெளிநாட்டவர்கள்

0
99

பெந்தர கடற்கரையில் அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட வெளிநாட்டுப் பெண், அவரது குழந்தை மற்றும் வெளிநாட்டுப் பிரஜை ஆகியோரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

இவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குப் பின்புறம் உள்ள கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த போது, ​​அலையில் அடித்துச் செல்லப்பட்டனர். அப்போது, ​​அவர்கள் உதவி கோரி சத்தம் எழுப்பியதால், உயிர்காக்கும் வீரர்கள் தண்ணீரில் குதித்து அவர்களை காப்பாற்ற முயன்றனர்.ஆனால் அலைகள் அதிகரித்ததால் அருகில் இருந்த அளுத்கம தியக்காவ நீர் விளையாட்டு சங்கத்தைச் சேர்ந்த நிரோஷன் பெர்னாண்டோ மற்றும் தரிந்து மற்றும் லாலுனா நீர் விளையாட்டு சங்கத்தைச் சேர்ந்த சாமோதா ஆகியோர் ஜெட் ஸ்கை உதவியுடன் விரைவாக அவர்கள் அருகில் சென்றனர். ஆர்ப்பரித்த அலைகளின் மத்தியில் அவர்களை  கரைக்கு அழைத்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்பின் வெளிநாட்டவர்களுக்கு முதலுதவி அளிக்க, உயிர்காக்கும் படையினர் ஏற்பாடு செய்தனர்.