கடலில் படகு கவிழ்ந்து விபத்து; 20 பலி!!

0
46

மத்திய ஆபிரிக்க நாடான கேமரூனின் லோகோநெட் – சாரி பகுதியிலுள்ள டாராக் தீவிலிருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது, இந்த விபத்தில் 20 பேர் நீரில் மூழ்கிப் பலியாகினர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் படையினர் நீரில் மூழ்கியவர்களை தேடி வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய முறையான விசாரணை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதிக சுமை, தவறான செயல்பாடுகள் மற்றும் கடுமையான வானிலை ஆகியவற்றால் அடிக்கடி படகு விபத்துகள் இப்பகுதியில் ஏற்படுகின்றன.