உத்தரவை மீறி பயணித்த பாரவூர்தி ஒன்றின் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
கடுவலை பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. விசாரணைகளின் போது இந்த பாரவூர்தி வத்தளை பகுதியில் திருடப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.நுரைச்சோலையை சேர்ந்த ஒருவருடைய பாரவூர்தி எனவும் இது மரக்கறி கொள்வனவிற்கு பயன்படுத்தப்படும் பாரவூர்தி எனவும் தெரியவந்துள்ளது.
பாரவூர்தி காணாமல் போனமை தொடர்பில் அதன் உரிமையாளர் காவல்துறையில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.கடுவலயில் இருந்து கொஸ்வத்த நோக்கிக் குறித்த பாரவூர்தி பயணித்த நிலையில் அதனைப் பின்தொடர்ந்த காவல்துறையினர் பாரவூர்தியின் டயர்களில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
குறித்த சம்பவத்தின் போது நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரிடம் இருந்து கைக்குண்டு ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.