கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் அமைச்சு பதவி ஏற்றிருப்பது கட்சிக்கும் கட்சி தலைமைக்கும் செய்திருக்கின்ற மிகப் பெரும் அநியாயமாகும்.
கல்குடா தொகுதியிலே 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை அளித்தமையினாலேயே இந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்திருப்பதென்பது உண்மையான விடயமாகும்.எனவே இந்த மக்களின் கருத்திற்கு எதிராக அரசாங்கத்திற்கு எதிராக நிற்க்கின்ற தருனத்தில் இப்பதவி எடுத்திருக்கும் நேரம் ஒரு விரோதமான விடயமாக இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் சிரேஸ்ட சட்டத்தரணி ஹபீப் றிபான் குறித்த செய்ற்பாட்டை கண்டித்து தமது கண்டனத்தை தெரிவித்தார்.
இன்று மாலை வாழைச்சேனையிலுள்ள தமது அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இவ் விடயம் தொடர்பாக தமது கருத்தினை அவர் இவ்வாறு தெரிவித்தார்.